தனியார் தோட்டத்தில் தீ விபத்து
பூதப்பாண்டி அருகே தனியார் தோட்டத்தில் தீ விபத்து
கன்னியாகுமரி
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தியை அடுத்த கேசவநேரி பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் வாழை, 100 க்கும் மேற்பட்ட மாமரங்கள், சப்போட்டா, பலா போன்ற மரங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தோட்டத்தில் கிடந்த காய்ந்த இலை, சறுகுகள் மீது எரிந்த தீ காற்றின் வேகத்தில் மள..மள..வென பரவியது. இதில் ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து கருகின. இதுகுறித்து அந்த பகுதியினர் நாகர்கோவில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதற்கிைடயே தீயில் எரிந்த மரங்களுக்கு அரசு போதிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தோட்டத்தின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story