வைக்கோல் போரில் தீ விபத்து


வைக்கோல் போரில் தீ விபத்து
x

வைக்கோல் போரில் தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் தாலுகா ஆலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது வீட்டில் உள்ள வைக்கோல் போரில் மின்கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரஹ்மான் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் மற்ற இடங்களில் தீபரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் ஏராளமான வைக்கோல் தீயில் எரிந்து நாசமானது.


Next Story