திருப்பத்தூர் நகராட்சி குப்பை குடோனில் தீ


திருப்பத்தூர் நகராட்சி குப்பை குடோனில் தீ
x

திருப்பத்தூர் நகராட்சி குப்பை குடோனில் திடீரென தீப்பிடித்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி குப்பை குடோனில் திடீரென தீப்பிடித்தது.

திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை குடோன் பாவூசா நகரில் உள்ளது. இங்கு நகரில் சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து சேகரிப்பார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குப்பை குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குப்பை கிடங்கிற்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பின்னர் நேற்று மதியம் 2 மணி அளவில் குப்பை கிடங்கில் தீ மீண்டும் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


Next Story