பேக்கரியில் பயங்கர தீ விபத்து


பேக்கரியில் பயங்கர தீ விபத்து
x

ெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் பேக்கரியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர்

குடிமங்கலம்

உடுமலை அருகே பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் பேக்கரியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்து

உடுமலையை அருகே பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் பேக்கரி ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பேக்கரிைய திறக்க கடை உரிமையாளர் வந்துள்ளார். பின்னர் அவர் கடை ஷட்டர் பூட்டை திறந்து ஷட்டரை நீக்கியபோது கடைக்குள் இருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் மளமள வென்று கடை தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உடனே பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றார். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அப்புறப்படுத்தப்பட்ட சிலிண்டர்

இதற்கிடையில் பேக்கரியில் இருந்த கியாஸ் சிலிண்டரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story