பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து


பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
x

கோவில்பாளையத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

கோயம்புத்தூர்


கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது55). இவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது குடோன் கோவில்பாளையம், சேரன் நகரில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை காளிதாசின் குடோனில் இருந்து திடீரென கரும்புைக வெளியேறியது. இது குறித்த தகவலின் பேரில் பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அதிகாரி பிரபாகரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

இதில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள், அட்டைப் பெட்டிகள் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினர் கூறினர்.


Next Story