அங்காள ஈஸ்வரி முனீஸ்வரன் கோவிலில் தீ மிதி திருவிழா
அங்காள ஈஸ்வரி முனீஸ்வரன் கோவிலில் தீ மிதி திருவிழா
தஞ்சை மேல வஸ்தாசாவடி எம்.ஜி.ஆர்.நகரில் அமைந்துள்ளது அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி தீமிதி திருவிழா கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அபிஷேகம் -சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.இதன் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தஞ்சை புதிய வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ள வலம்புரி பாலச்சந்தர் விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் புனித நீராடி, அலகு குத்தி, பால்காவடி, முளைப்பாரி, மா விளக்கு, எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்துக்கு ஆலய நிர்வாகி மனோகரன் தலைமை தாங்கினார். தலைவர் ரகுநாதன், செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலை அடைந்தது. பின்னர் அங்கு பக்தர்கள் தீ மித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செய்தார்கள். விழாவை யொட்டி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.