தீ தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி


தீ தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
x

தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.

மதுரை

தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.

தீத்தொண்டு வாரம்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் கடந்த 14-ந்தேதி தீத்தொண்டு நாள் (நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில், மீட்புப்பணியின் போது வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 14-ந்தேதி முதல் நேற்று வரை தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களிலும் ஒரு வாரம் தீத்தொண்டு வாரமாக அனுசரிக்கப்பட்டது. அப்போது, தீ பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

சைக்கிள் பேரணி

அதன் ஒரு பகுதியாக தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்த சைக்கிள் பேரணி நேற்று காலை நடந்தது. இந்த சைக்கிள் பேரணியை, மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை தென்மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் மதுரை மாவட்ட அலுவலர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி, திருமங்கலம் தீயணைப்பு நிலையம் வரை சுமார் 35 கி.மீ. நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்து விளக்கும் வகையில் அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை வைத்தபடி, தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், தீயணைப்பு வீரர்களுடன், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் பங்கேற்றவர்களுக்கு திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story