கிணத்துக்கடவில் பள்ளி, தொழிற்சாலைகளில் தீத்தடுப்பு விழிப்புணர்வு


கிணத்துக்கடவில் பள்ளி, தொழிற்சாலைகளில் தீத்தடுப்பு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் பள்ளி, தொழிற்சாலைகளில் தீத்தடுப்பு விழிப்புணர்வு

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தினை முன்னிட்டு கிணத்துக்கடவில் உள்ள தீயணைப்பு நிலையம் சார்பில் தனியார் நிறுவனம், பள்ளிகளில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் கலந்துகொண்டு தீ தடுப்பு குறித்த விளக்கங்கள் அளித்து துண்டு பிரசுரம் வழங்கினார். மேலும் சிலிண்டரில் ஏற்படும் தீ, வீடுகள் மற்றும் வண்டிகளில் ஏற்படும் தீயை அணைக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வீடுகளில் கியாஸ் கசிந்தால் உடனடியாக மின்விளக்கு சுவிட்சை அழுத்தக்கூடாது. முதலில் உடனடியாக அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்து தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றனர். இதில் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி மாணவ -மாணவிகள் உள்பட கலந்து கொண்டனர்.


Next Story