ஆதர்ஷ் பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
வாணியம்பாடியில் ஆதர்ஷ் பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
வாணியம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வாணியம்பாடி தீயணைப்பு அலுவலர் பி.கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் தீயை அணைப்பது எப்படி என்பது குறித்த செயல் விளக்கத்தை செய்து காட்டினர். மேலும் பல்வேறு வகையான தீ விபத்துகள் குறித்தும், தீயை அணைக்கும் முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மாடி கட்டிடங்களில் தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி வெளியேற்றுவதற்கான செயல்முறைகளையும், பல்வேறு மீட்பு பணிகளின் போது காயமடைந்தவர்களை கையாள்வது குறித்த விழிப்புணர்வு செய்து காட்டினர். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் தீயை அணைப்பது, விபத்தில் சிக்கியவர்களை காப்பாறுவது உள்ளிட்ட செயல்முறைகளை செய்து காட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் செந்தில்குமார், பள்ளி நிர்வாக இயக்குநர் ஷபானபேகம் மற்றும் ஆசிரியைகள், மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.