அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வடபொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான வீரர்கள் ரமேஷ்குமார், சிவக்குமார், யூசுப் கான், சுரேஷ்குமார், விக்னேஸ்வரன், முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சுகாதார நிலையம் உள்பட பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைக்க வேண்டும். தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். .இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story