தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி தனியார் நிறுவனத்தில் காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் சசிகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுடர்மணி கோபாலசுந்தர், தங்கமருது பாண்டியன், பழனிக்குமார், மாரிக்கண்ணன், சந்தராஜ் ஆகியோர் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைக்க முயற்சி செய்வது போன்ற செய்முறை விளக்கங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story