தீ விபத்து தடுப்பு ஒத்திகை


தீ விபத்து தடுப்பு ஒத்திகை
x

தீ விபத்து தடுப்பு ஒத்திகையை கலெக்டர் பார்வையிட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே மாந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் திரவநிலை எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்பது, முதலுதவி அளிப்பது மற்றும் மருத்துவமனைக்கு அனுப்புவது, மேலும் தீயை கட்டுப்படுத்துவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இயற்கை எரிவாயு நிறுவன பாதுகாப்பு துறை, மாவட்ட தீயணைப்புத்துறை, மாவட்ட நிர்வாகம், மருத்துவ துறையினர், பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழுத் தலைவர் சேஷாவெங்கட், நகரமன்ற துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் ரமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story