திருச்சி அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை
திருச்சி அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.
திருச்சி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. மருத்துவமனை டீன் டாக்டர் நேரு தலைமை தாங்கினார். இதில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் எப்படி செயல்படுவது, தீ பற்றி கொண்டால் எப்படி அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். அவசர காலத்தில் நோயாளிகளைப் பத்திரமாக மீட்பது குறித்தும் விளக்கினர். மேலும் சமையல் கியாஸ் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தால் எப்படி அதை கையாளுவது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இதனை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி அனுசுயா விளக்கி கூறினார். இதில்தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார், சிறப்பு நிலைய அலுவலர் பிரான்சிஸ், கலந்து கொண்டு பல்வேறு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ், டாக்டர் செந்தில்குமார், பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.