தொழிற்சாலை பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
செங்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலை பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி நடந்தது.
தென்காசி
செங்கோட்டை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவுப்படி, செங்கோட்டை அருகே உள்ள தனியார் ரப்பர் கையுறை தயாரிப்பு தொழிற்சாலையில் தீத்தடுப்பு பயிற்சி நடந்தது. செங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் செல்வன், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி அளித்தனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story