தி.மு.க. பேனருக்கு தீவைப்பு


தி.மு.க. பேனருக்கு தீவைப்பு
x

கடையத்தில் தி.மு.க. பேனருக்கு தீவைக்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடையம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கடையம் வடக்கு பஜார் பகுதியில் பேனா் வைக்கப்பட்டு இருந்தது.

சம்பவத்தன்று இரவு அந்த பேனருக்கு மர்ம நபர்கள் தீவைத்து சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் இதை பார்த்த தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கடையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story