திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கல்லாத்தூர் வண்ணான் ஏரியில் இருந்து கரகம் சோடிக்கப்பட்டு, வாண வேடிக்கையுடன் மேளங்கள் முழங்க முக்கிய வீதி வழியாக கோவிலை சென்றடைந்தனர். அங்கு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சியானது ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமையிலும், ஊர் நாட்டார்கள் குமார், பழனிச்சாமி, இளையராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. ராஜேந்திரன், பொன்வடிவேல், சுந்தரம் மற்றும் ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு ஒரு மாதமாக பூமுடையான் குடியாடு மகாபாரத ஆசிரியர் கொளஞ்சிநாதன் தலைமையில் மகாபாரதம் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. மேலும் 18 மண்டகப்படிகளில் தினமும் திரவுபதி அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. விழாவில் கல்லாத்தூர், தண்டளை, மேலூர், கீழகுடியிருப்பு, மேலகுடியிருப்பு, வடுகர்பாளையம், வடவீக்கம், குளத்தூர், கூவத்தூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story