திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள சின்னபொன்னம்பூண்டி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவில் சாமி வீதி உலாவும், தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story