திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா


திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:46 PM GMT)

வடக்குபொய்கைநல்லூா் திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையை அடுத்த வடக்கு பொய்கை நல்லூர் வடக்கு தெருவில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதிதிருவிழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மன் வீதியுலா நடைபெற்றது. நேற்று மஞ்சள் நீராட்டு விழாவும் தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.


Next Story