பட்டாசு பதுக்கியவர் கைது


பட்டாசு பதுக்கியவர் கைது
x

பட்டாசு பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் மற்றும் போலீசார் சிவகாமிபுரம் காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள லாரி செட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் அந்த லாரி செட்டின் உரிமையாளர் அனுப்பன்குளத்தை சேர்ந்த ராமசாமி மகன் கணேசனை (வயது41) கைது செய்தனர். சிவகாசியில் உள்ள சில லாரி செட்டுகளில் உரிய அனுமதியின்றி பெட்டி, பெட்டியாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு பதுக்கி வைக்கப்படும் பட்டாசுகளால் பல இடங்களில் வெடி விபத்து ஏற்படுகிறது. எனவே இது போன்ற சம்பவங்களை தடுக்க அனுமதியின்றி லாரி செட்டுக்களில் பட்டாசுகளை பதுக்கி வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Related Tags :
Next Story