பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்


பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்
x

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பஸ் நிறுத்தத்தில் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹிம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகம் அளிக்கும் வகையில் சாக்கு பையுடன் நின்று கொண்டு இருந்த வாலிபாிடம் சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி தயார் ெசய்து பதுக்கி வைத்திருந்த 20 கிலோ சோல்சா வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அன்பின்நகரம் மேற்கு தெருவை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story