குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்


குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்
x

வலங்கைமானில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவாரூர்

வலங்கைமானில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

குடோன்களில் ஆய்வு

வலங்கைமான் பகுதி பட்டாசு கடை மற்றும் குடோன்களில் நேற்றுமுன்தினம் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேலவை ஊராட்சி ஆண்டாள் கோவில் குடவாசல் மெயின் ரோட்டில் தென்னந்தோப்பில் உள்ள ஒரு குடோனில் விதிகளை மீறி இருப்பு வைக்கப்பட்ட பட்டாசுகளை சோதனை செய்தார். அதில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் இருப்பு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு இடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி குடோன்களில் இருப்பு வைத்துள்ள பட்டாசுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

ஆய்வின்போது நன்னிலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ், குடவாசல் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் நேற்று சில இடங்களில் உள்ள குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள், வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 6 பேைர போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.


Next Story