திருச்சியில் ரூ.1¼ லட்சம் பட்டாசுகள் பறிமுதல்


திருச்சியில் ரூ.1¼ லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
x

திருச்சியில் ரூ.1¼ லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் நடத்த விண்ணப்பித்த நபர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி, அவர்களுக்கு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சில இடங்களில் உரிய அனுமதியின்றி உரிமம் பெறாமல், பாதுகாப்பு இன்றி சிலர் பட்டாசுகளை விற்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் கோட்டை போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உரிமம் பெறாமல் அனுமதியின்றி, வெடிபொருள் சட்ட விதிகளை மீறி 3 பேர் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதில் திருமலை என்பவரிடம் 14 பட்டாசு பெட்டியும், பாலமுருகன் என்பவரிடம் 20 பட்டாசு பெட்டியும், கார்த்திகேயன் என்பவரிடம் 20 பட்டாசு பெட்டியும் சேர்த்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 54 பட்டாசு பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story