கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலி


கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலி
x

உடுமலையில் கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக பதிவுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்

உடுமலையில் கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக பதிவுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணவன்-மனைவி கருத்து வேறுபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட யு.எஸ்.எஸ் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மல்லிகா (வயது 32). இவர்களுக்கு திவ்யா மற்றும் பிரசன்னா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். மல்லிகா தனது கணவர் செல்வராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மல்லிகா தனது கணவர் செல்வராஜ் வீட்டிற்கு வந்து உள்ளார். இந்த சூழலில் மறுநாள் மாலை செல்வராஜ் மற்றும் மல்லிகாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் மல்லிகாவை தீக்காயத்துடன் சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிலர் கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பெண் சாவு

இது குறித்து வழக்கு பதிவு செய்த உடுமலை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் மல்லிகா மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக செல்வராஜ் கூறினார். அதை மறுத்த மல்லிகா தனது கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்றதாக கூறினார்.

அதைத் தொடர்ந்து போலீசார் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து உடுமலை போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் பலத்த தீக்காயங்களுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த மல்லிகா சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். அதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்டிய கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் பலியான சம்பவம் உடுமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ெதாடர்பாக போலீசார் கொலை வழக்காக பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Related Tags :
Next Story