24 மணிநேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் தீயணைப்பு வீரர்கள்


24 மணிநேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் தீயணைப்பு வீரர்கள்
x

24 மணிநேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் தீயணைப்பு வீரர்கள்

தஞ்சாவூர்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பகோணத்தில் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

24 மணிநேரமும் பாதுகாப்பு பணி

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி கும்பகோணத்தில் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புயல் பாதிப்புகளை தடுக்க தேவையான அனைத்து உபகரணங்களும் தீயணைப்பு நிலையத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கும்பகோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் கூறுகையில்,

மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா உத்தரவின் பேரில் கும்பகோணம் வருவாய் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புயல் மற்றும் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

30 தீயணைப்பு வீரர்கள்

கும்பகோணம் அருகே கண்டறியப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் ஏற்படும் புயல் பாதிப்புகளை தடுக்கவும், தேவையான மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் தீயணைப்பு வாகனங்கள், ரப்பர் படகுகள், ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்டுகள், மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மரம் அறுக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் ஈடுபட 30 தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.


Next Story