லிப்டில் சிக்கிய 2 பெண்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


லிப்டில் சிக்கிய 2 பெண்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x

லிப்டில் சிக்கிய 2 பெண்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்
லிப்டில் சிக்கிய 2 பெண்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

அரக்கோணம் அவுசிங் போர்டு பகுதியில் உள்ள தனியார் பார்ட்டி ஹால் மற்றும் விடுதி உள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு இந்த விடுதியில் உள்ள லிப்டில் வந்த தாய், மகள் 2 பேர் கதவு திறக்காததால் உள்ளே சிக்கி கொண்டனர்.

இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததனர். அதன்பேரில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) தெய்வமணி தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து லிப்ட் உள்ளே சிக்கி இருந்த 2 பெண்களை மீட்டனர். இதனையடுத்து 2 பேரும் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story