தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-31T00:16:38+05:30)

ராகுல்காந்தியின் நடைபயணம் நிறைவையொட்டி தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றி தனது நடை பயணத்தை நிறைவு செய்தார். அதை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் அப்துர் ரகுமான் தலைமையில் தேன்கனிக்கோட்டையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில் மாநில செயலாளர் தேன்கு அன்வர், பிற்படுத்தப்பட்டோர் அணி நிர்வாகி சீனிவாசன், நகர தலைவர் பால்ராஜ், முன்னாள் நகர தலைவர் தாஸ், இளைஞர் காங்கிரஸ் தெற்கு நகர தலைவர் ஷேக் ஆதம், மாவட்ட துணைத்தலைவர் அசன் ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் சுபேர், தளி தொகுதி பொதுச்செயலாளர் நஞ்சுண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள், ெதாண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காந்தியின் நினைவு சின்னத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story