வாணியம்பாடியில் முதலுதவி அளித்தல் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
வாணியம்பாடியில் முதலுதவி அளித்தல் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் முதலுதவி அளித்தல் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளித்து காப்பாறுவது குறித்து நகராட்சி பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் நடந்தது.
விழிப்புணர்வு ஊர்வலத்தை கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் சி.என்.ஏ ரோடு, நியூ டவுன், கல்லூரி சாலை வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் முதலுதவி செய்வது, இதயத்துடிப்பு நின்றுவிட்டால் செய்யப்படும் அவசரகால உயிர்காக்கும் செயல்முறையை பற்றி டாக்டர்கள் நிட்டிரோஸ்டேவிட், ஜெ.டேவிட்விமல்குமார், தினேஷ், பிலோமின் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் வாணியணும்பாடி நகராட்சியில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கமாக செய்து காட்டினர்.