அரியலூரில் முதலுதவி பயிற்சி மையம்


அரியலூரில் முதலுதவி பயிற்சி மையம்
x

அரியலூரில் முதலுதவி பயிற்சி மையம் திறக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் ஆலைகளில் பணிபுரிபவர்கள் முதலுதவி பயிற்சி பெறுவதற்கு தமிழ்நாடு திறன் வளர்ச்சி துைற அரியலூர் ஏ.எஸ்.மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து பயிற்சி மைய தொடக்க விழா நடந்தது. இதில் திறன் வளர்ச்சி துைற மேலாளர் வெங்கடாஜலம் வரவேற்று பேசினார். வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர் தலைமை தாங்கி, பயிற்சி மையத்தை திறந்து வைத்து மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறுவதற்கு இந்த மையத்தில் பயிற்சி பெற்று அதன் சான்றிதழை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினார். இதில் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அகமது ரபி எதிர்பாராத விதமாக விபத்துகள் நடைபெற்று, அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி முதலுதவி வழங்குவது என்று கலந்து கொண்டவர்களுக்கு விளக்கி கூறினார். முடிவில் இயக்குனர் முகமது ரியாஸ் நன்றி கூறினார்.


Next Story