சுதந்திர தினத்தையொட்டி காவல்துறை அதிகாரிகளுக்கு முதல் அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு.!


சுதந்திர தினத்தையொட்டி காவல்துறை அதிகாரிகளுக்கு முதல் அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு.!
x

கோப்புப்படம் 

2022ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றிய ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல் அமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் தமிழக முதல் அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் 10 அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெறுவோருக்கு தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story