சென்னை, எழும்பூரில் சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, எழும்பூரில் சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டரங்கத்தை திறந்து வைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை,

7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடக்கவுள்ள இப்போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இப்போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்த நிலையில் சென்னை, எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டரங்கத்தை திறந்து வைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம், கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடத்தையும் முதல் அமைச்சர் திறந்து வைத்தார்

Related Tags :
Next Story