பயனாளிகளிடம் குறைகளை கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பயனாளிகளிடம் குறைகளை கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

ஆம்பூரில் இருந்து திருப்பத்தூர் வரை வழியெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் வழிகளில் எங்கும் தி.மு.க. கட்சி கொடியே, பேனர்களோ வைக்கப்படவில்லை. மாறாக சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிக்குள் நின்றவாறு கொடி அசைத்தும், வாழ்க கோஷம் எழுப்பியும் பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் வாழை மர தோரணங்கள் மட்டும் கட்டப்பட்டு இருந்தது.

விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் திடீரென பயனாளிகள் அமர்ந்து இருக்கும் பக்கத்திற்கு சென்று மக்களோடு மக்களாக நின்றவாறு மனுக்களை பெற்றார். அப்போது அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தும் பொதுமக்களையும், பயணாளிகளையும் வியப்பில் ஆழ்த்தினார்.

விழா மேடைக்கு வரும் வழியில் மாற்றுத்திறனாளிகளுக்காக 3 சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் வழங்க வைக்கப்பட்டு இருந்தது. அந்த பயனாளிகளிடம் நேரில் சென்று வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மாற்றுத்திறனாளிகள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story