முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந் தேதி ராணிப்பேட்டைக்கு வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந் தேதி ராணிப்பேட்டைக்கு வருகை
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி ராணிப்பேட்டைக்கு வர இருப்பதையொட்டி 10-ந் தேதிக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலை தயார்செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி ராணிப்பேட்டைக்கு வர இருப்பதையொட்டி 10-ந் தேதிக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலை தயார்செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகிறார். இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்து ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். முன்னதாக கன்னிகாபுரத்தில் கட்டப்பட்டுள்ள சி.எம்.சி. மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10-ந் தேதிக்குள்

பொதுப்பணித் துறை அலுவலர்கள் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழையும் வழி, வெளியில் செல்லும் வழி ஆகியவற்றிற்கு வரைபடம் தயாரித்து வழங்க வேண்டும். அனைத்து துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் பயனாளிகளின் விவரங்களை வருகிற 10-ந்் தேதிக்குள் தயார் செய்து கொடுக்க வேண்டும்.

ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் துணை ஆட்சியர் அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து 100 சதவீதம் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story