ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை திடீர் ரத்து


ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை திடீர் ரத்து
x
தினத்தந்தி 19 Jun 2022 6:39 PM IST (Updated: 19 Jun 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது வைக்கப்பட்டுள்ளது. வேறு தேதி அறிவிக்கப்பட்டு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்


ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது வைக்கப்பட்டுள்ளது. வேறு தேதி அறிவிக்கப்பட்டு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் வருகை ஒத்திவைப்பு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 மற்றும் 21-ந் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தருவதாக இருந்தது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கலெக்டர் அலுவலக திறப்பு விழா, சி.எம்.சி. மருத்துவமனை திறப்பு விழா, வேலூர் புதிய பஸ்நிலையம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அவற்றை திறந்து வைத்து 3 மாவட்டங்களை சேர்ந்த 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்தன. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் பிரமாண்டமான மேடை மற்றும் பயனாளிகள் அமருவதற்கான மேற்கூரை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களுக்கு வருகை மற்றும் நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.அவரின் வருகை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

லேசான காய்ச்சல்ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது வைக்கப்பட்டுள்ளது. வேறு தேதி அறிவிக்கப்பட்டு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த சூழ்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் டாக்டர்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். எனவே ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. அவற்றிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story