மதுரையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மதுரையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 9 Dec 2022 10:22 AM IST (Updated: 9 Dec 2022 10:36 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.

மதுரை,

மதுரை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார்.

முதல் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ரெயில் பயணம் செய்யும் மு.க.ஸ்டாலின் நேற்று தென்காசியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் நேற்று இரவு மதுரை வந்தடைந்தார்.

இந்த நிலையில், இன்று காலை முக்கிய திட்டமான தூய்மை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை மதுரை மாந்கராட்சி கூட்டரங்கில் முதல் அமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர். தூய்மை பணியாளர்களுக்கான காலணிகள், கவச உடைகள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் முதல்வர் வழங்க உள்ளார். 30 கேள்விக்கான பதில்கள் தூய்மை பணியாளர் மேம்பாட்டிற்கான செயலி வாயிலாக சேகரித்து தகவல்களை ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

அவர்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தூய்மை பணியாளர் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் மதுரையில் முதல் அமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை, மதுரை, பொள்ளாச்சி, புதுக்கோட்டை, சேரன்மகாதேவியில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.


Next Story