வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்


வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
x

வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரிசைபட்டியில் அமைந்துள்ள வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி தலைவர் எம்.என்.ராஜா தலைமை தாங்கி பேசுகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப சமுதாயத்தில், மாணவர்கள் தங்களை எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும், வருங்காலத்தில் எவ்வாறு தொழில் முனைவோர்களாக வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும், மாணவர்கள் பெறும் அரசு நிதியுதவி திட்டங்களையும், மானியங்களையும் பெற்று வாழ்வை வளமாக்கி கொள்வது குறித்தும், மாணவர்களின் வளர்ச்சியே, வருங்கால இந்தியாவின் வளர்ச்சி என்று மாணவர்களை ஊக்கப்படுத்தியும், கல்லூரியின் விதிமுறைகளையும், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு கட்டுப்பாடுகளையும் எடுத்து கூறினார்.

இதையடுத்து, வரதராஜன் கல்வி குழுமத்தின் ஆலோசகர் மகாலிங்கம் மாணவர்கள் தங்களது வாழ்வில் வெற்றி பெறும் வழிமுறை குறித்து பேசினார். குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், மாணவர்களை நல்வழிபடுத்துவது குறித்தும் பேசினார். விழாவில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சுரங்கவியல், கெமிக்கல் மற்றும் முதலாம் ஆண்டு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். முடிவில் கல்லூரி துணை முதல்வர் விஜயன் நன்றி கூறினார்.


Next Story