கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்


கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 3 July 2023 6:47 PM GMT)

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.

ராமநாதபுரம்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.

முதலாம் ஆண்டு வகுப்பு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அவரவர் மதிப்பெண்கள், நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் மாணவ, மாணவிகள் தங்களுக்கான மேல்படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். இவர்கள் ஒருபுறம் தங்களின் மேல்படிப்பை தேர்வு செய்த நிலையில் மதிப்பெண் குறைந்த, நீட் தேர்வில் வெற்றி பெறாத மாணவ, மாணவிகள் தங்களின் கல்வித்தகுதிக்கு ஏற்பவும், தங்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் கலை அறிவியல் கல்லூரிகளில் தங்களுக்கான பாட வகுப்பினை தேர்வு செய்துள்ளனர்.

அவரவர் மதிப்பெண்கள் அடிப்படையில் இடம் கிடைத்துள்ள நிலையில் மாணவ, மாணவிகள் கலைக்கல்லூரிகளில் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் நேற்று முதல் தங்களின் கல்லூரி கல்வியை தொடங்க ஆர்வமுடன் கல்லூரிகளுக்கு சென்றனர்.

மகிழ்ச்சியுடன் வந்த மாணவிகள்

ராமநாதபுரத்தில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கலை அறிவியல் பாட பிரிவுகளில் இடம் கிடைத்துள்ள மாணவிகள் நேற்று வண்ண உடைகள் அணிந்து கல்லூரிக்கு முதல்நாள் வகுப்புகளை தொடங்க ஆர்வமுடன் வந்தனர். பள்ளிகளில் ஒன்றாக படித்தவர்கள், புதிய மாணவிகள் என அனைவரும் அணிவகுத்து கல்லூரி வளாகத்திற்குள் மகிழ்ச்சியுடன் வந்தனர். ஒருவரை தங்களை அறிமுகம் செய்து கொண்டு தங்களின் விருப்பு பாட தேர்வு குறித்து பேசினர்.

கல்லூரிக்கு முதல்நாள் வந்த மாணவிகளை கல்லூரி முதல்வர் சுமதி தமையில் பேராசியர்கள் வரவேற்று அவரவர் வகுப்பறைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். முதலாம் ஆண்டில் 560 மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில் தற்போது வரை 500 மாணவிகள் சேர்ந்துள்ளதாகவும், இன்னும் நாட்கள் உள்ளதால் அனைத்து இடங்களும் பூர்த்தி செய்யப்படும் என்றும் தற்போது முதல் பாட வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது,


Next Story