அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது.
புதுக்கோட்டை
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கின. அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு நேற்று முதல் நாளில் கல்லூரி தொடர்பாகவும், பாடங்கள் தொடர்பாகவும் விளக்கி கூறப்பட்டன. இதேபோல் விடுதியில் தங்கி படிப்பவர்கள், விடுதியில் சேர்ந்தனர். அடுத்ததாக மருத்துவ மாணவர்களுக்கான சீருடையில் வகுப்புகள் தொடங்கும். இதற்கான விழா தனியாக நடைபெறும் என கல்லூரி வட்டாரத்தில் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story