நஞ்சராயன் குளத்தின் கரையோரம் மீன்கள் இறந்த நிலையில் மிதந்தது


நஞ்சராயன் குளத்தின் கரையோரம் மீன்கள் இறந்த நிலையில் மிதந்தது
x

ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் குளத்தின் கரையோரம் மீன்கள் இறந்த நிலையில் மிதந்ததால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர்


ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் குளத்தின் கரையோரம் மீன்கள் இறந்த நிலையில் மிதந்ததால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நஞ்சராயன் குளம்

ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது.இதில் சுமார் 280 ஏக்கர் பரப்பளவில் மீன் பிடிப்பு பகுதியாக நீர் நிறைந்து காணப்படுகிறது.

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் சாயக் கழிவுகள் கலந்து குளத்தின் நீர் மாசுபட்டு இருந்தது.இதையடுத்து இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் குளத்தை சீரமைக்க வேண்டுமெனவும் அதிக அளவில் பறவைகள் வந்து செல்வதால் இதனை பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு 2015ஆம் ஆண்டு ரூ.4 கோடி மதிப்பீட்டில் நஞ்சராயன் குளத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குளத்தினை சீரமைக்கும் பணிகள் மேற்கொண்டன.

நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட தமிழக அரசு முதல் கட்டமாக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் குளிர்கால வலசை வந்து செல்கின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் வலசை வரும் பறவைகள் மார்ச் மாதம் வரை இங்கு தங்கியிருந்து பின்னர் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப செல்லும்.பொதுவாக வட துருவத்தில் வாழும் பறவைகள் குளிர்காலத்தில் இரை தேடவும் கடும் குளிரில் இருந்து தப்பிப்பதற்காக மிதவெப்ப நாடுகளான இந்தியா போன்ற துணை கண்டங்களுக்கு வந்து செல்கின்றனர்.

செத்து மிதந்த மீன்கள்

முதல் கட்டமாக குளம் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்படும் அதனைத் தொடர்ந்து விளக்க கூடம் அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு பறவைகளைப் பற்றிய விளக்கப்படங்கள் அமைக்கப்படும்.குலத்தினை சுற்றி சுகாதாரமற்ற முறையில் இருக்கும் சூழ்நிலை மாற்றப்பட்டு அனைவரும் வந்து செல்லும் இடமாக மாற்றி அமைக்கப்படும் எனவும் குளத்திற்குள் மணல் திட்டுகள் புல்வெளி திட்டுகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாற்றி அமைக்கப்படும் எனவும் இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரைவில் பணிகள் துவங்கும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று குளத்தின் கரையோரம் ஆயிரக்கணக்கான மீன்கள் நீரில் இறந்து மிதந்தன.

இதனை பார்த்த மக்கள் அதிக அளவில் சாயக்கழிவு நீர் குளத்தில் கலந்திருப்பதால் மீன்கள் இறந்து இருக்கலாம் என வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீன்கள் இறந்ததற்கான காரணத்தையும் மேலும் மீன்கள் இது போல் ஆயிரக்கணக்கில் இறக்காமல் இருக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்


Related Tags :
Next Story