மீன், இறைச்சி விற்பனை மந்தம்


மீன், இறைச்சி விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மீன், இறைச்சி விற்பனை மந்தமாக இருந்தது.

அரியலூர்

மீன், இறைச்சி வாங்குவதை தவிர்த்தனர்

புரட்டாசி மாதத்தில் பலர் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் மீன்-இறைச்சி விற்பனை குறைவாக இருக்கும். இந்நிலையில் இந்தாண்டு புரட்டாசி மாதம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பிறந்தது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், அசைவ பிரியர்கள் மீன், கோழி, ஆட்டிறைச்சி போன்றவற்றை வாங்கிச்ெசன்று சமைத்து உண்பது வழக்கம்.

ஆனால் நேற்று புரட்டாசி மாதம் பிறந்ததால் பலர் மீன், இறைச்சி வாங்குவதை தவிர்த்தனர். இதனால் அவற்றின் விற்பனை வழக்கத்தை விட குறைவாக இருந்தது. இதன்படி அரியலூரில் மீன்கள் விற்பனை மூன்றில் ஒரு பங்கும், ஆட்டிறைச்சி விற்பனை 50 சதவீதமும், கோழி இறைச்சி 40 சதவீதமும் குறைவாக இருந்ததாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

விற்பனை மந்தம்

இதையொட்டி கறிக்கோழி வரத்து குறைக்கப்பட்டுள்ளதால், விலையில் மாறுபாடு இல்லாமல் கிலோ ரூ.160-க்கு விற்கப்படுகிறது. நேற்று கடைகளில் குறைந்த அளவிலான ஆடுகளே அறுக்கப்பட்டு, இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்தனர். சராசரியாக 4 பெட்டிகள் அளவில் கடல் மீன்கள் விற்பனை ஆகும் கடையில், ேநற்று ஒரு பெட்டி அளவிலான மீன்களே வைக்கப்பட்டிருந்தன.

இதில் இறால் கிலோ ரூ.300-க்கும், ஒரு கிலோ என்ற அளவில் நாட்டு வவ்வால் ரூ.150 முதல் ரூ.180 வரையும், சங்கரா ரூ.200, நண்டு ரூ.200, கெண்டை ரூ.150, ஜிலேபி ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்தபோதும் அவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் பலர் வராததால் விற்பனை மந்தமாக இருந்ததாக கடைக்காரர்கள் தெரிவித்தனர். ேமலும் மார்க்கெட் பகுதியில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

1 More update

Next Story