ரூ.98 லட்சத்தில் மீன் மார்க்கெட்: கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு

ரூ.98 லட்சத்தில் மீன் மார்க்கெட்: கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 31 March 2023 12:00 AM IST (Updated: 31 March 2023 12:00 AM IST)
t-max-icont-min-icon

ரூ.98 லட்சத்தில் மீன் மார்க்கெட்: கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகில் கோழி, ஆடு, மாடு, மீன் போன்ற இறைச்சி விற்பனைக்கு ஒருங்கிணைந்த நவீன மீன் மார்க்கெட் வளாகம் கட்டப்படுகிறது. இதற்காக ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து 48 கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை தரமானதாகவும், அதே நேரத்தில் விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது கவுன்சிலர்கள் இளமாறன், துரைபாய், நாச்சிமுத்து மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story