வரத்து அதிகரிப்பால் மீன் விலை குறைந்தது


வரத்து அதிகரிப்பால் மீன் விலை குறைந்தது
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வரத்து அதிகரிப்பால் மீன் விலை குறைந்தது

கோயம்புத்தூர்


உக்கடம்

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக் குடி, ராமேசுவரம், கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப் படுகிறது.

மேலும் ஆழியாறு, திருமூர்த்தி அணை மற்றும் குளங்க ளில் பிடிக்கப்படும் மீன்களும் கொண்டு வரப்படுகிறது.

கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதால் சபரிமலை செல்ப வர்கள் மட்டுமின்றி பலரும் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள். ஆனால் கோவை மீன் மார்க்கெட்டில் வரத்து அதிகமாக இருந்த தால் மீன்கள் விலை குறைந்து உள்ளது.

அதன் விலை (கிலோவுக்கு) விவரம் வருமாறு:-

வஞ்சரம் ரூ.750, பாறை ரூ.450, ஊழி ரூ.300, விலா மீன் ரூ.450, மத்தி ரூ.150, நெத்திலி ரூ.300, அயிலை ரூ.200, சங்கரா ரூ.300, செம்மீன் ரூ.450, கிளிமீன் ரூ.400, சாலமீன் ரூ.750, பொன்னாரம் ரூ.700, ராமேசுவரம் புழு நண்டு ரூ.650, நண்டு ரூ.400,

அணை மீன்களான ரோகு ரூ.180, கட்லா ரூ.180, நெய் ரூ.150, வாவல் ரூ.200-க்கும் விற்பனையானது என்று மீன் மார்க்கெட் வியாபாரிகள் சங்க துணை தலைவர் அப்பாஸ் கூறினார்.


Next Story