கோவையில் மீன்கள் விலை உயர்வு


கோவையில் மீன்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 24 July 2023 5:00 AM IST (Updated: 24 July 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மீன்கள் விலை உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

உக்கடம்

கோவையில் மீன்கள் விலை உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

உக்கடம் மீன் மார்க்கெட்

கோவை உக்கடம் லாரிபேட்டையில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதுதவிர உக்கடம்-பேரூர் சாலையிலும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. உக்கடம் லாரிபேட்டை மீன்மாா்க்கெட்டுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த நிலையில் தற்போது ஆடி மாதம் பிறந்து உள்ளது. இந்த மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் ஆடி மாதம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனால் மீன் உள்ளிட்ட இறைச்சிகளின் நுகா்வு குறைந்து உள்ளது. இதன் காரணமாக மீன்கள் வாங்க வாடிக்கையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தனர்.

மீன் நுகர்வு குறைந்தபோதிலும் உக்கடம் லாரிபேட்டை மார்க்கெட்டில் மீன்கள் விலை குறையாமல் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி நேற்று வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது.

இதுகுறித்து மீன்மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

வஞ்சிரம் ரூ.1,200

உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு கேரளா மற்றும் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கடலூர் போன்ற பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் காற்றின்வேகம் அதிகளவு உள்ளது. இதனால் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதில் சிக்கல் உள்ளது. இதன்காரணமாக மீன் வரத்து குறைந்து உள்ளது. மேலும் மீன் வாங்க வருவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் வரத்து மிகவும் குறைந்து உள்ளதால் மீன் விலை உயர்ந்து காணப்படுகிறது.

அதன்படி மீன்பிடி தடைகாலத்துக்கு முன்பு வஞ்சிரம் கிலோ ரூ.1,000-க்கு விற்றது. தற்போது ரூ.1,200, பாறை ரூ.400, ஊழி ரூ.400, மத்தி ரூ.200, நெத்திலி ரூ.250, சங்கரா ரூ.250 முதல் ரூ.400 வரை, இறால் ரூ.350, ராமேஸ்வரம் புளு நண்டு ரூ.400, சாதா நண்டு ரூ.300-க்கும் விற்பனையானது. அதேவேளையில் ஆந்திரா, பவானிசாகர் உள்பட பல்வேறு அணை பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களின் விலை சற்று குறைந்து உள்ளது. அதன்படி கிலோ ரூ.200-க்கு விற்ற ரோகு மீன் ரூ.120, கட்லா ரூ.180, நெய் மீன் ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story