கோவையில் மீன்கள் விலை உயர்வு
தடைகாலம் காரணமாக வரத்து குறைந்ததால் கோவையில் மீன்கள் விலை உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவை
தடைகாலம் காரணமாக வரத்து குறைந்ததால் கோவையில் மீன்கள் விலை உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தடைகாலம்
கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் உக்கடம் மார்க்கெட்டுக்கு மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும் விலையும் உயர்ந்தது. இதனால் மீன்கள் வாங்க வாடிக்கையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தனர்.
வரத்து குறைந்தது
இதுகுறித்து மீன் வியாபாரி அப்பாஸ் கூறும்போது, உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கடலூர் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 20-க்கும் மேற்பட்ட லோடு மீன்கள் வரும். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் குறைந்த அளவே மீன்கள் வருகிறது என்றார்.
விலை நிலவரம்
மீன்கள் விலை நிலவரம் வருமாறு(கிலோவில்):-
வஞ்சிரம் ரூ.1,000, பாறை ரூ.500, ஊழி ரூ.450, விலா ரூ.500, மத்தி ரூ.150 முதல் ரூ.250 வரை, நெத்திலி ரூ.300, அயிலை ரூ.250, சங்கரா ரூ.450, இறால்(செம்மீன்) ரூ.450 முதல் ரூ.600 வரை, சால்மன் ரூ.1,000, ராமேஸ்வரம் புழு நண்டு ரூ.650, சாதா நண்டு ரூ.400.
ஆந்திரா, பவானிசாகர் உள்பட பல்வேறு அணை பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மீன் விலை விவரம்(கிலோவில்):-
ரோகு ரூ.180, கட்லா ரூ.180, நெய் ரூ.140, வாவல் ரூ.200.