உக்கடம் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு


உக்கடம் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 20 March 2023 12:15 AM IST (Updated: 20 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உக்கடம் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்தது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு ராமேசுவரம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து அதிக அளவு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்தவர்கள் மீன் மார்க்கெட்டிற்கு வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவியத் தொடங்கினர். அவர்கள் மார்க்கெட்டில் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர். வெயில் காலம் தொடங்கி உள்ளதால் தற்போது மீன்கள் வரத்து சற்று குறைவாக உள்ளது. இதன் காரணமாக உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

கடந்த மாதம் ரூ.750-க்கு விற்பனையான சின்ன வஞ்சிரம் மீன் விலை ரூ.100 உயர்ந்து கிலோ ரூ.850-க்கு விற்பனையானது. உக்கடம் மீன்மார்க்கெட்டில் விற்பனையான மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அயிலை மீன்-ரூ.100, விளமீன்-ரூ.450, வஞ்சிரம்-ரூ.850, மத்தி-ரூ.140, வாவல் ரூ.800, ஊளி-ரூ.400, இறால்-ரூ.500, பாறை-ரூ.400, நண்டு-ரூ.700, கிழங்கான்-ரூ.150-க்கு விற்பனையானது. மீன் வியாபாரி ஒருவர் கூறும் போது, தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால் மீன் பிடிப்பது குறைந்து விடும். இதனால் மார்க்கெட்டிற்கும் வரத்து சற்று குறைந்து வருகிறது. இதனால் மீன்கள் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது என தெரிவித்தார்.

1 More update

Next Story