வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு


வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
x

வரத்து குறைவால் வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்திருந்தது.

வேலூர்

வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை, விசேஷ நாட்களில் மார்க்கெட்டில் அசைவபிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மீன்கள் அதிகளவு விற்பனையாகும். ஆடிமாதம் மற்றும் பிரதோஷம் போன்றவற்றால் நேற்று மீன்கள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆனால் மீன்களின் விலை கடந்த வாரத்தை விட சிறிதளவு உயர்ந்து காணப்பட்டது.

ஒருகிலோ வஞ்சிரம் பெரிய மீன் ரூ.1,500-க்கும், நடுத்தர வஞ்சிரம் ரூ.800 முதல் ரூ.1,000-க்கும் இறால் ரூ.350 முதல் ரூ.400-க்கும், கட்லா மீன்கள் ரூ.160 முதல் ரூ.180-க்கும் விற்பனையானது. சங்கரா மீன் ரூ.350 முதல் ரூ.400-க்கும், விறால் ரூ.500-க்கும் நெத்திலி ரூ.220 முதல் ரூ.280-க்கும், அயிலை மீன் ரூ.180-க்கும், ஷீலா ரூ.350-க்கும், சுறா ரூ.400 முதல் ரூ.600-க்கும், மத்திமீன் ரூ.120-க்கும் நெய்மீன் ரூ.140-க்கும், ஜிலேபி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டன. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் அங்கிருந்து மீன்கள் வரவில்லை. தமிழகத்தில் இருந்து மீன்கள் வரத்து குறைவாக காணப்பட்டது. அதனால் விலை சிறிதளவு அதிகரித்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story