வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு


வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
x

மீன்பிடி தடைக்காலம் எதிரொலியாக வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்திருந்தது.

வேலூர்

வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன.

வேலூர் மீன்மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் அசைவபிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அன்றைய தினம் அதிகளவு மீன்கள் விற்பனையாகும். அதன்படி ஞாயிற்றுக்கிழமையன்று காலை முதல் அசைவ பிரியர்கள் மீன்மார்க்கெட்டில் குவிந்தனர். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் வழக்கத்தைவிட மீன்கள் குறைவாக மார்க்கெட்டிற்கு வந்தன. அதனால் கடந்த வாரத்தை விட விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

ஒரு கிலோ வஞ்சிரம் பெரிய மீன் ரூ.1,500 முதல் ரூ.1,700-க்கும், வஞ்சிரம் நடுத்தர மீன் ரூ.800 முதல் ரூ.1,200-க்கும், இறால், பாறை மீன் ரூ.350 முதல் ரூ.400-க்கும், சுறா ரூ.600-க்கும், விறால் ரூ.450 முதல் ரூ.500-க்கும், சங்கரா சிறிய மீன் ரூ.200 முதல் ரூ.300-க்கும், அயிலை, கட்லா ரூ.180-க்கும், நெத்திலி ரூ.180 முதல் ரூ.220-க்கும், மத்தி ரூ.100 முதல் ரூ.140-க்கும், ஜிலேபி ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மீன்பிடி தடைக்காலமான அடுத்த மாதம் (ஜூன்) 14-ந் தேதி வரை மீன்களின் விலை அதிகமாகவே காணப்படும் என்று மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story