பெருந்துறை அருகே மீன் கடையில் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது
பெருந்துறை அருகே மீன் கடையில் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
பெருந்துறை
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 28). இவர் கிரே நகர் ரோடு பகுதியில் மீன் வறுவல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் பார்த்திபன் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடைக்குள் இருந்து 2 பேர் கியாஸ் சிலிண்டரை தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர். இதனை பார்த்த பார்த்திபன் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து 2 பேரையும் பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த ஷேக் சையது அலி (28), விஜயமங்கலம் சேரன் நகரைச் சேர்ந்த ஸ்ரீதரன் (41) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.