மீனவர் தீக்குளித்து தற்கொலை
உவரி அருகே மீனவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
திசையன்விளை:
உவரி அருகே உள்ள கூடுதாழை அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகன் கனிஸ்டன் (வயது 28), மீனவர். இவரது மூத்த அண்ணன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனவேதனையில் இருந்த கனிஸ்டன் கடந்த 12-ந் தேதி பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீவைத்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மற்றொரு அண்ணன் கிரேஷ்டன், உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story