மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
காயல்பட்டினத்தில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் மங்களவாடி சுனாமி நகரை சேர்ந்தவர் ராஜ் என்பவருடைய மதன் (வயது 40). கடலில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து வின்சில்டா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதன் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடமும், தாய் அந்தோணியம்மாளிடமும் தகராறு செய்துள்ளார்.
இதனால் மனைவியும், தாயும் பக்கத்து வீட்டுக்கு சென்று இரவு படுத்துக் கொண்டனர். வீட்டில் டி.வி. சத்தமாக வைத்து மதன் பார்த்துள்ளார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் வீட்டு கதவு திறக்காததால், வீட்டில் எட்டிப் பார்த்தபோது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அந்தோணியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.