கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு


கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு
x

உவரி அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

கன்னியாகுமரியை சேர்ந்தவர் மிக்கேல் (வயது 35), மீனவர். இவர் உவரியை அடுத்த கூட்டப்பனையில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று பைபர் படகில் மீனவர்களுடன் சேர்ந்து கூட்டப்பனை கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது பலத்த கடல் அலை வீசியுள்ளது. இதில் நிலைதடுமாறி கடலில் விழுந்த அவர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து இடிந்தகரையில் வசித்து வரும் அவரது மனைவி விஜயா, உவரி கடலோர காவல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மீனவர் மிக்கேலுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.


Next Story